இவர்கள் திருந்தவே மாட்டார்கள்
மூன்று
நாட்களுக்கு முன்னர் தான் கேமரா கண்காணிப்பில் சார் பதிவாளர் அலுவலகங்கள் என்கிற
பதிவினை வெளியிட்டு அதனால் ஒரு பயனும் இல்லை என்று தெரிவித்திருந்தேன். இதோ ஒரு
செய்தி.
சர்ர்-பதிவாளரின்
பொறுப்பற்ற பதிலை பாருங்கள். கட்டணம் யார் செலுத்தினாலும் பதிவு செய்யலாமாம்.
அப்படியாக பதிவுத்துறை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதா ? கட்டணம் செலுத்தினால்
யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்
என்கின்ற பட்சத்தில் பளிங்கு கற்களால் ஆன கட்டிடம் எதற்கு ? கணிணி எதற்கு ? தேவையற்ற பணியாளர்கள்
எதற்கு ? பால் பூத் போல ஒரு
தகர கொட்டகை அமைத்து வசூல் செய்து தபால் அலுவலகம் போல் முத்திரை குத்தி பத்திரம்
வழங்கலாமே ? உயர் நீதி மனறம் இது
போன்ற வழக்குகளில் பலமுறை கண்டித்தும் பதிவுத்துறையின் பொறுப்பற்ற தன்மையினை
என்னவென்று சொல்வது ? எதெதற்கோ பொது நல
வழக்கு போடும் நபர்கள், சமூக நல விரும்பிகள்,
அரசியல் வல்லுனர்கள், சட்ட மேதைகள் வாய் மூடிக்கொண்டிருப்பதன் பொருள்
புரியவில்லை.
ஒரு துறைக்கு தலைவராக
ஐ.ஏ.எஸ் அதிகாரியினை அரசாங்கம் நியமிப்பது இது போன்ற சட்ட குறைபாடுகளை சரி
செய்யுமாறு அரசுக்கு அறிவுறுத்தி, சட்ட சீர் திருத்தம் கொண்டு வரச்செய்யத்தான். நீதி மன்றமும்
ஒவ்வொரு முறையும் கண்டணம் தெரிவிப்பதோடு சரி. அதனை சரி செய்யும்படி
உத்திரவிடுவதுமில்லை. அது சரி
செய்யப்படுகின்றதா என்று
கவனிப்பதுமில்லை.
வணக்கம்...
பதிலளிநீக்குவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை... தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நன்றி தன்பாலன் அவர்களே ! பிற வலைப்பூக்களில் வெளியிடப்படும் உங்களின் பின்னூட்டங்களில் ஒன்றையும் தவற விடாதவன். உங்களை 2 -ம் பதிவர் திருவிழாவில் நேரில் சந்தித்து உங்களிடம் உரையாடியுள்ளேன். என்னை நினைவில் கொள்ளும் அளவிற்கு நான் மிகப்பெரிய நபர் இல்லை. வருகைக்கு நன்றி.
நீக்குபாலாஜி