காவல் துறையின்
மெத்தன போக்கு - தீவிரவாதிகளுக்கு ஒரு அழைப்பு.
நமது நாட்டில் எதற்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ, நீதிமன்றங்களுக்கு பஞ்சமே
இல்லை. ஆனால் நீதி கிடைப்பதில் தான் பஞ்சம். Majistrate Court,
Munsif
Court, Sessions Court, sub-court, District Court என்பதோடில்லாமல், Additional, Principal,
என்கின்ற கூடுதல் மற்றும் முதன்மை நீதி மன்றங்களோடு, இளஞ்சிறார்
குற்றங்களை விசாரிக்க இளங்குற்றவாளிக்கான நீதிமன்றம் (juvenile
court ), குடும்ப வழக்குகளை விசாரிக்க குடும்ப நல நீதிமன்றம் (Family
Court), நுகர்வோர் வழக்குகளை தீர்த்து
வைக்க நுகர்வோர் நீதிமன்றம் (Consumer Court), சமரச உடன்படிக்கைகளை தீர்த்து வைக்க மக்கள் நீதிமன்றம் (Lok Adalat), போக்குவரத்து குற்றங்களை
விசாரிக்க ஒரு தனி நீதிமன்றம் (Traffic Court), தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க தொழிலாளர்
நீதிமன்றம் (Labour Court), அரசு ஊழியர்கள் பிரச்சினையை தீர்க்க நிர்வாக தீர்ப்பாலயம் (Administrative
Tribunal), இராணுவ வீரர்களின் குற்றங்களை விசாரிக்க இராணுவத்தாராலேயே நடத்தப்படும்
ஒரு தனி நீதிமன்றம் (Military Court), மற்றும் இராணுவ வீரர்களின் பிரச்சினையை தீர்க்க
இராணுவ தீர்ப்பாலயம் (Armed Froces
Tribunal) என்று பல தரப்பட்ட நீதிமன்றங்கள்.
வழக்குகளின் தன்மை மற்றும் தரத்திற்கேற்ப அவற்றினை விசாரிக்க
பல்வேறு நீதிமன்றங்கள்
இருந்த போதிலும், எந்த ஒரு நீதிமன்றத்திலாவது எந்த ஒரு வழக்கிலாவது, மிகக்குறைந்த
பட்சம் ஒரு வருடத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா ?
வீட்டு மனை வாங்க செலுத்திய பணத்திற்கு, மனை வழங்க இயலாத நிலையில், பலமுறை படி ஏறி இறங்கி செலுத்திய
பணத்தினை திருப்பி அளிக்குமாறு கேட்டதற்கு பாதி பணம் திருப்பி அளித்துவிட்டு, மீதி
பாதியை திருப்பி அளிக்காமையினால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2008
–ம் வருடம் ஆணை பெறப்பட்டும், அதனை அந்த அமைப்பு (மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு
நல சங்கம், தி.நகர், சென்னை) பெற்றுக்கொள்ளாமையினால், 2010 –ம் ஆண்டு ஒரு பிடியாணை
செயலாக்க தி.நகர் காவல் நிலையத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் கடிதம் ஒன்றினை
அனுப்பியது. 2010 –ம் வருடம் முதல் இன்றைய நாள் வரை தி.நகர் காவல் நிலையத்தால் செயலாக்கப்படவில்லை. ஒவ்வொரு
மாதமும் வழக்கு விசாரணைக்கு வரும்பொழுதெல்லாம், நுகர்வோர் நீதிமன்றமும், மறுதேதி
குறிப்பிட்டு வழக்கினை ஒத்தி வைக்க வேண்டியது ஒன்றே அதன் கடமை . என்று செயல்
பட்டுக்கொண்டிருக்கின்றது. வழக்கு தொடுத்தவனுக்குத்தானே வலி தெரியும். நானும் விக்கிரமாதித்யன்
போல என் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், தி.நகர் காவல் நிலையம் சென்று பிடியாணையின் நிலவரம்
என்ன என்று கண்டறிய சென்றேன். காவல் நிலைய எழுத்தரும் என்ன ஆணை, யாரால் எப்பொழுது
வழங்கப்பட்டது என்று பொறுமையுடன் கேட்டுவிட்டு, அது போல ஒன்று பெறப்படவில்லை
என்றும், அதன் நகல் ஒன்றினை கொண்டு வரும்படியும் “பொறுப்புடன்” பதில் அளித்தார்..
நானும் சலித்துக்கொள்ளாமல், நுகர்வோர் நீதிமன்றம். சென்று பிடியாணை நகல் ஒன்றினை
கேட்டேன். அதற்கு நுகர்வோர் நீதிமன்றம், அவ்வாறு பிடியாணையினை மனுதாரருக்கு வழங்க
இயலாது என்றும், வேண்டுமெனில், பிடியாணை கடிதம் வழங்கப்பட்ட கடிதம் எண் மற்றும் தேதியினை
அளிப்பதாகவும் கூறி உதவினார்கள். அதனை எடுத்துக்கொண்டு மறுபடியும் தி.நகர் காவல் நிலையம் சென்றேன். மணிக்கணக்கில் காக்க
வைத்து விட்டு, மூன்று நாட்கள் கழித்து திரும்பவும் வரச்சொன்னார்கள். நானும்
மூன்றாவது முறையாக மூறு நாட்கள் கழித்து தி.நகர்
காவல் நிலையம் சென்றேன். காவல் உதவியாளர் ஒருவர், ஒரு பெரிய காகித பண்டல்
ஒன்றினை என் முன்னே பிரித்து ஒவ்வொன்றாக பிரித்து படித்து இதுவா, இதுவா என்று
காட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு வழியாக கண்டுபிடித்து எடுத்து கொடுத்தால் அது
2013 –ம் வருடம் நுகர்வோர் நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட நினைவூட்டல் கடிதம். 2010 –ம்
வருடம் வழங்கப்பட்ட பிடியாணையினை நினைவு படுத்தி அனுப்பப்பட்ட கடிதம். 2010 –ம் வருடம்
அனுப்பப்பட்ட பிடியாணை என்பதனை அறிந்த காவல் நிலைய எழுத்தர், அந்த ஆணையினை
காணவில்லை, நீங்கள் நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நகல் பெர்று வாருங்கள் என்று
கூறி என்னை அனுப்பி விட்டார். எனக்கென்னவோ, காவல் நிலைய ஊழியர், பிடியாணையினை
சம்பந்தப்பட்ட நபரிடம் காட்டி, அதனை செயல்படுத்தாமலிருக்க, சம்பந்தப்பட்ட நபரிடம்
பணம் பெற்றுக்கொண்டு, பிடியாணையினை குப்பைத்தொட்டிக்கு சமர்ப்பணம் செய்திருப்பார்
என்றே எண்ணுகின்றேன்.
காவல் நிலையம் மூன்று முறை என்னை அலைக்கழித்ததை கூட நான் பெரியதாக
எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால்,
ஒரு நீதிமன்ற பிடியாணைக்கே காவல் நிலையம் அளிக்கும் மதிப்பு இது என்றால், ஒரு
சாதாரண மனிதனின் புகாரின் கதி என்னவாக இருக்கும் ?
கடைக்கு சென்று ஒரு செய்தித்தாள் வாங்கிக்கொண்டு வா என்பது போல நீதிமன்றத்திலிருந்து
மீண்டும் ஒரு பிடியாணை பெற்று வா என்று கூறியது
ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக ஒரு நடவடிக்கையும் எடுக்காத மெத்தனம்
இவற்றையெல்லாம் பார்க்கையில், தீவிரவாதிகளே, இரயில் நிலையம், பேருந்து நிலையம்
என்று வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களை ஏன் கொல்கின்றீர்கள், வாருங்கள் இரயில்
நிலையம், பேருந்து நிலையம் ஆகியனவற்றிற்கு பதிலாக காவல் நிலையம் வந்து வெடிகுண்டு வைக்க
வாருங்கள் என்று அழைப்பு விட தோன்றுகின்றது.
அன்பின் அய்யா. வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றுதான் தங்கள் தளத்தினைத் தொடர்வோனாகப் பதிவு செய்தேன். தங்களின் இந்தப் பதிவு கொஞ்சம் ஓவரா இருக்கே?
மதுரை வலைப்பதிவர் திருவிழா நம் தமிழ்வலைப்பதிவர் அனைவரையும் இணைக்கட்டும். வணக்கம்.
வலைப்பதிவினை தொடர்வதற்கு மிகவும் நன்றி. தங்களின் வருகையினால் மிகவும் உவகை அடைகின்றேன். என்னுடைய இந்த பதிவு சற்று மிகை தான் என்பதனை நானும் உணர்கின்றேன். பதிவு செய்வதற்கு முன் பலமுறை யோசித்தும் பார்த்தேன். அந்த சமயத்தில் சென்னை யிலோ அல்லது வேறு ஏதோ ஒரு பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறையின் மெத்தன நடவடிக்கை என்னை அவ்வாறு எழுத தூண்டியதேயன்றி என் நோக்கம், விருப்பம் அது அல்ல. இது போன்ற மெத்தன நடவடிக்கைகளே வெடிகுண்டு சம்பவங்களுக்கு காரணமாக அமையலாம் என்பதே என் கருத்து.
நீக்குசாதாரன மனிதர்கள் எக்கர்ணம் கொண்டும் காவல் நிலையம் செல்லாமல் இருப்பதே உசிதம் என்பதே இன்றைய நிலை
பதிலளிநீக்கு